பதிவு 2- யேர்மனி டுசில்டோவ் மாநிலஅவை முன்பாக தீபமேற்றி மலர்தூவிய மக்கள்.

424 0

முதலில் பேரணியில், ஒப்பனையும் பாவனையும் வழங்கிய தமிழாலயங்கள் திடலுக்கள் அணிகளாக வருகை தந்து, மேடையின் முன்பாக நின்றிருந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருக்க, நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்ற அருட்தந்தை அல்பெர்ட் கோலன் (Albert Koolen) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து வணக்க நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் பொதுமக்களிற்கான நினைவிடங்களிற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 27.09.1999 அன்று திருநெல்வேலி பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் இசைவாணன் என்றழைக்கப்படும் குணரத்தினம் திருவேந்தன் அவர்களது சகோதரர் திரு.குணரத்தினம் திருச்செல்வம் அவர்கள் ஏற்றி வைத்தார்.