துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

85 0
தெஹிவளை, நெடிமல பகுதியில் நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று மீகொடை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தெஹிவளை, நெடிமல பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் கடை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீகொடை – களுவலதெனிய பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.