பல்லாயிரக்கணக்காக அணிதிரண்ட பிரித்தானியத் தமிழ்மக்கள்.

130 0

நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு முள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பிற்கான
நீதி வேண்டிய போராட்டத்தை மேற்கொண்டனர் இப்போராட்டமானது பிரித்தானிய பாராளுமன்ற திடலில் கண்டனப் போராட்டமாக ஆரம்பித்து மிகப் பெரும் போரணியாக பிரித்தானிய பிரதமரின் வதிவிடம் நோக்கிச் சென்றது. இப்போராட்டமும் பேரணியும் பிரித்தானிய மக்களையும் ஏனைய பல்லாயிரக்கணக்கான அனைத்துலக மக்களையும் உற்று நோக்கும் வகையில் அமையப் பெற்றது.16ம் ஆண்டை நினைவு கூரும் வகையில் பிரித்தானியாவின் பிரதான வீதி வழியாக தமிழின அழிப்பை சித்தரிக்கும் காட்சிப்பதிவுகளைத் தாங்கிய ஒளித்திரை ஊர்தியானது பலமணி நேரங்களாக பரப்புரையில் ஈடுபடுத்தப்பட்டதும் சிறிலங்காவின் முகத்திரையானது சர்வதேச அரங்கில் தோலுரித்துக் காட்டப்பட்டது. தொடர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தமிழின அழிப்பிற்கான அனைத்துலக நீதியையும் வலியுறுத்திய
மனு பிரித்தானிய பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.