அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

117 0

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  காவந்திஸ்ஸ  பாடசாலைக்கு அருகில் மே 16 ஆம் தேதி பிற்பகல்,  அம்பாறை  பிராந்திய போக்குவரத்து பொறுப்பதிகாரிக்குக்கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்தின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  சந்தேகநபர் எதிர்வரும் மே 23 ஆம் தேதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றிய வரும் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவுக்கமைய குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மே 17 முதல் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.