மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் எகொடஉயன பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
எகொடஉயன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் காலி நாகொடை பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 06 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் எகொடஉயன பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை (15) எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை திருடியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

