ரயில் நிலைய அதிபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் நேற்றைய தினம் இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதால் இன்றைய தினமும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணியமர்த்தல் உட்பட சேவைச் சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

