எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை தேசிய பொசன் பூரணை வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரர் இதனை அறிவித்துள்ளார்.
இன்று (15) இடம்பெற்ற பொசன் குழுவில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய புனித பிரதேசங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

