2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

112 0
2024 (2025) க. பொ. த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செயன்முறைப் பரீட்சைகள் இம் மாதம் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்ட அறிக்கையின் படி, செயன்முறைப் பரீட்சைகள் மே 21 முதல் 31 வரை நாடு முழுவதும் 1,228 பரீட்சை மையங்களில் இந்த செயன்முறைத் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இதில் சுமார் 1,71,100 பரீட்சார்த்திகள் பங்கேற்க உள்ளனர்.

செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் பாடங்கள்:

இசை (Eastern Music) –  40

இசை (Western Music) –   41

கார்நாடக இசை (Carnatic Music) –  42

உள்ளூர் நடனம் (Local Dancing) – 44

பரதநாட்டியம் ( Bharatha Dancing) – 45

நாடகம் மற்றும் நாடகக் கலை (சிங்களம்) – 50

நாடகம் மற்றும் நாடகக் கலை (தமிழ்) – 51

நாடகம் மற்றும் நாடகக் கலை (ஆங்கிலம்) –52

மேற்கு இசைக்கு உரிய கேட்டல்  திறன் பரீட்சை (Listening Test) மே 25  அதே பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் மையங்களில் நடத்தப்படும்.

 

அவதானிக்க வேண்டியவை:

எழுத்துப் பரீட்சையும்  , நடைமுறைப் பரீட்சையும் இரண்டும் கட்டாயம்.

செயன்முறைப் பரீட்சையில் பங்கேற்காதவர்களுக்கு அந்த பாடத்திற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது.

 

அனுமதிப்பத்திரம் மற்றும் திருத்தங்கள்:

பாடசாலைகள் வழி பரீட்சார்த்திகள் – அனுமதிப்பத்திரங்கள் மற்றும் நேர அட்டவணைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் – விண்ணப்பத்தில் கொடுத்த முகவரிக்கு அனுப்பப்படும்.

பாடம், மொழி, அல்லது தனிப்பட்ட விபரங்களில் தவறுகள் இருந்தால், உடனடியாக பாடசாலைப் பரீட்சைகள் பிரிவை தொடர்புகொள்ள வேண்டும்.

 

உதவிக்கு:

அனுமதிப்பத்திரம் பெறாத பாடசாலைகள் – பாடசாலை இலக்கம், பெயர் மற்றும் முகவரியுடன் தெரிவிக்க வேண்டும்.

தனியார் பரீட்சார்த்திகள் – பெயர், முகவரி, பரீட்சை இலக்கம் மற்றும் அழகியல் பாட விபரங்களை அனுப்ப வேண்டும்.

மேலும், பரீட்சை இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk இணையதளத்தின் மூலம் மே 19 முதல் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.