ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வௌியிட்ட தகவல்

74 0

ரயில்வே திணைக்களத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக ரயில் சேவைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், ரயில் தாமதங்கள் காரணமாக பயணிகள் சில நேரங்களில் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறையையும், போதுமான ரயில் இயந்திரங்கள் மற்றும் பெட்டிகள் இல்லாததன் காரணமாக இந்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன சுட்டிக்காட்டினார்.