தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
திணைக்களம் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.00 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்ததாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதாக துசித ஹல்லோலுவ மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு, இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அவரது சட்டத்தரணி அகலங்க உக்வத்த ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த 4ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட அறிக்கை ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதோடு, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் துசித ஹல்லொலுவ மற்றும் குறித்த அறிக்கையை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக துரித விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது

