ஜேர்மனியின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டவர் கைது

133 0

தன்னை ஜேர்மனியின் மன்னர் என தானே பிரகடனம் செய்யப்பட்ட ஒருவரை ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

ஜேர்மனியின் மன்னர்

2012ஆம் ஆண்டு, பீற்றர் (Peter Fitzek, 59) என்பவர் ஜேர்மனியின் மன்னராக தானே பதவியேற்றுக்கொண்ட விடயம் ஊடகங்களில் கவனம் ஈர்த்தது.

germany king

அது முதல் ஜேர்மனியில் பல இடங்களை நிலங்களை வாங்கத் துவங்கினார் பீற்றர்.

பீற்றரை பின் தொடர்வோர், அல்லது அவரது குடிமக்கள் Reichsbürger அல்லது Reichஇன் குடிமக்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

தங்களுக்கென தனியாக அடையாள அட்டை, கொடி, நாணயம் முதலானவற்றை உருவாக்கியுள்ள Reichஇன் குடிமக்கள், தங்களுக்கென தனியாக வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளையும் உருவாக்க விரும்புகிறார்கள்.

மன்னர் கைது

இந்நிலையில், பீற்றரையும் அவரது மூத்த முடிமக்கள் மூன்று பேரையும் தற்போது ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

 

 

 

germany king

ஜேர்மன் அரசை கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்ந்த Reichஇன் குடிமக்கள் என்னும் அமைப்பும் கலைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt), Reichஇன் குடிமக்கள் அமைப்பு, ஒரு மாற்று அரசை உருவாக்குவதன் மூலமும், அதிகாரத்திற்கான தங்கள் உரிமைகோரலை ஆதரிக்க யூத எதிர்ப்பு சதி கதைகளை பரப்புவதன் மூலமும், சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.