கடற்கரையில் திடீரென கரை ஒதுங்கிய டொல்பின்கள்

88 0
களுத்துறை கடற்கரையில் 6 டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன.

இந்த டொல்பின்கள் ஏதேனுமொரு விபத்தில் சிக்கி இவ்வாறு கரை ஒதுங்கியிருக்கலாம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக களுத்துறை கடல் கொந்தளிப்பாக இருப்பதாக பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.