சீன உர இறக்குமதி ஒப்பந்தம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினர் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (14) முன்பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பான சாட்சியங்களை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றில் முன்வைக்குமாறு கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மஹிந்தானந்த அலுத்கமகே 2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக கடமையாற்றிய போது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

