சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து!

76 0

ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் பாதுகாப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெசாக் விடுமுறைக்குப் பின்னர் ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் பாதுகாப்பாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை.

இதனால் இன்று புதன்கிழமை (14) பிற்பகல் வரை 20க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இன்று மாலை நேரத்தில் மேலும் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டலாம் எனவும் யில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.