அநுராதபுரம், மெதகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு பின்புறத்தில் உள்ள ரயில் கடவையில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
மெதகம, பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

