நெடுந்தீவு, தேசிய மின்விநியோக கட்டமைப்புடன் இணைக்கப்படாத பிரதேசமாகும். எனவே, இப்பகுதிக்கு மின் விநியோகம் மின்பிறப்பாக்கிகள் மூலமாகவே நடைமுறையில் இருக்கின்றது.
இந்தநிலையில், கடந்த வாரம் முக்கிய மின்பிறப்பாக்கி ஒன்று திடீரென பழுதடைந்தது.
இதன் காரணமாக நெடுந்தீவில் திடீர் மின்தடை ஏற்பட்டது. கடந்த 10ஆம் திகதி இரவு ஏற்பட்ட மின்தடை காரணமாக, நெடுந்தீவு வைத்தியசாலையில் டார்ச் லைட் உதவியுடன் அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து வைத்தியசாலை நிர்வாகம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சந்திரசேகர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பவானந்தராஜா மற்றும் இளங்குமரன் ஆகியோரது தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, புதிய மின்பிறப்பாக்கி ஒன்றை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மின்பிறப்பாக்கி விரைவில் நெடுந்தீவுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

