வெசாக் தினத்தன்று சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை விற்பனை செய்தவர் கைது

97 0
குருணாகல்  – பொல்கஹவல பிரதேசத்தில் வெசாக் தினத்தன்று அதிக விலைக்கு சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை விற்பனை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொல்கஹவல பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்கஹவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பொல்கஹவல – வெலிகடஹேன பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 27 மதுபான போத்தல்கள் மற்றும் 25 பியர் டின்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 70 ஆயிரம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.