கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது AIDAstella சொகுசு கப்பல்

139 0
இத்தாலிய கப்பலான AIDAstella சொகுசு கப்பல் திங்கட்கிழமை (12) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

மலேசியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (11) இரவு அம்பாந்தோட்டையை வந்தடைந்த இந்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

254 மீட்டர் நீளமுள்ள AIDAstella சொகுசு கப்பல்  திங்கட்கிழமை (12) இரவு மாலைத்தீவை சென்றடையவுள்ளது.

AIDAstella சொகுசு  கப்பல் 2022 சுற்றுலா பயணிகளையும் 628 பணியாளர்களையும் கொண்டுள்ளது.

இந்த கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள்  திங்கட்கிழமை (12) இரவு கொழும்பு, பின்னவல, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளனர்.