இலவச இணைய வசதியை (free wifi) வழங்குவதற்கு உங்களது OTP இலக்கத்தை பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்களிடமிருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி உங்களது OTP (One-time password) இலக்கத்தை அதில் பதிவு செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

