கல்லடி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் சனிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஈரளக்குளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஆவார்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்துடன் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

