பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடபாத்த வீதியின் படகெத்தர பகுதியில், பெண்ணொருவர் பாதசாரி கடவையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தர், பிலியந்தலை மடபாத்த பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.
மடபாத்தயிலிருந்து பிலியந்தலை நோக்கிச் சென்ற கார் ஒன்று பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது கார் ஒன்று மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண், பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலுதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

