இன்று 10/05/2025 சனிக்கிழமை நெதர்லாந்தில், தமிழின அழிப்புநாள்- மே 18 பரப்புரைகள் இரண்டாம் கட்டமாக லேலிஸ்டாட் மற்றும் ஆம்ஸ்டர்டம் பைல்மர்என்னும் இடங்களில் நடைபெற்றது.
தாயகத்தில், 2009 வரை, சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழ்மக்கள்மேல் மேற்கொள்ளப்பட்ட
தமிழின அழிப்பை வெளிப்படுத்தி, தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணைகளையும் பன்னாட்டு மக்களிற்கு இவ் இன அழிப்பை வெளிப்படுத்தியும் மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களில் ஆங்கில, டச் மொழிகளில் பிரசுரங்கள் தமிழ்ப்பெண்கள் அமைப்பினால் விநியோகிக்கப்பட்டது. இப்பரப்புரைகள் நெதர்லாந்தின் இன்னும் பல பிரதேசங்களிலும் மே 18 வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.






