யாழ் மாவட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் ஒரு பக்கெட் உப்பு 179 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருலிங்கநாதன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது.
எனவே 179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் இன்று சனிக்கிழமை (10) முதல் கொள்வனவு செய்ய முடியும். பொதுமகன் ஒருவர் ஆகக் கூடியது 3 உப்பு பக்கெட்களையே கொள்வனவு செய்ய முடியும் என்றுள்ளது.

