கொட்டாஞ்சேனை மாணவியின் காது மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வந்தது!

65 0

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி தமது கல்வி நிலையத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் பல தடவை அவருக்கு உடல்நல பிரச்சினை ஏற்பட்டிருந்ததாக சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்கு உள்ளான தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் சிவானந்த ராஜா தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சிறுமி தொடர்பான சம்பவம் குறித்து சமூக வளைதளங்களில் வெளியாகும் செய்தி தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரான சிவானந்த ராஜா முறைப்பாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளார்.

தன்னை பற்றியும் தனது அரசியல் மற்றும் தொழில் பற்றியும் போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் அது தொடர்பில் முறைபாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

 

 மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி குறித்த மாணவி எமது கல்வி நிலையத்தில் வந்து இணைந்துள்ளார். கல்வி நிலையத்தில் இணைந்த முதல் வாரத்திலேயே அவருக்கு காதிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வந்துள்ளது.

இதனையடுத்து ஆசிரியர்களும், சக மாணவர்களும் இணைந்து முதலுதவி செய்து முகம் கழுவச் செய்து அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இரண்டாவது கிழமை அந்த சிறுமி மயங்கி விழுந்தது.

இந்த நிலைமை தொடர்பில் எனக்கும் தெரியாது. மூன்றாவது மற்றும் நான்காவது கிழமைகளில் வகுப்பில் குறித்த சிறுமி தனியாக அமர்ந்திருந்தார். இதன்போது அவரை நான் முன்பகுதியில் சென்று அமருமாரு தெரிவித்த போது சிறுமியின் உடல்நிலை அசாதாரணமாக இருப்பதை நான் அவதானித்தேன்.

அதனை தொடர்ந்து சிறுமியின் தாயாரை அழைத்து அவருக்கு உரிய வைத்திய சிகிச்சையை அளிக்குமாறு நான் தெரிவித்தேன். அத்துடன் இவ்வாறான நிலையில் அந்த மாணவியை எமது கல்வி நிலையத்திற்கு அனுப்ப வேண்டாம் விருப்பமானால் வேறு எங்காவது அனுப்புங்கள் என்றும் தெரிவித்தேன்.

பெப்ரவரி 15ஆம் திகதி இந்த சம்பவம் நடந்த நிலையில் அதன்பிறகு அந்த மாணவி எமது கல்வி நிலையத்திற்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.