உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மின்மாற்று அபிவிருத்திக் கருத்திட்டம்

72 0

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முழுமையான பரஸ்பர நம்பிக்கை தொடர்பான பணிச்சட்டகத்தின் கீழ் உயர் முன்னுரிமை மின்மாற்று அபிவிருத்திக் கருத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபையால் தயாரிக்கப்பட்டுள்ள 2023 – 2032 ஆண்டுக்கான நீண்டகால மின்மாற்றுத் திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள உயர் முன்னுரிமை மின்மாற்று அபிவிருத்திக் கருத்திட்டக் கோவையை நடைமுறைப்படுத்துவதற்காக முழுமையான பரஸ்பர நம்பிக்கை தொடர்பான பணிச்சட்டகத்தின் கீழ் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளன.

உத்தேச முழுமையான பரஸ்பர நம்பிக்கை தொடர்பான பணிச்சட்டகத்தின் கீழ் 10 கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அடையாளங் காணப்பட்டுள்ளது.

சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தின் மூலம் வழங்கப்படவுள்ள 10 மில்லியன் டொலர் பிணை வசதியுடன் கூடிய உலக வங்கி 40 மில்லியன் டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 30 மில்லியன் டொலர்களையும் முதலீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணைந்து வழங்குகின்ற முழுமையான பரஸ்பர நம்பிக்கை தொடர்பான பணிச்சட்டகத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள உபமின் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக 60 மில்லியன் டொலர் முதலீட்டைப் பெற்றுக் கொள்வதற்கும், 10 மில்லியன் டொலர் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தின் அனுசரணை வழங்கும் இடர் காப்பீட்டு பிணை வசதியைப் பெற்றுக் கொள்வதற்குரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.