ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவரை தாக்கிய 6 சந்தேகநபர்கள் கைது

104 0

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 6 மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியதை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அத்துமீறி நுழைந்த  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சேர்ந்த  மாணவர் குழுவினர் அப்பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்று வரும் மாணவர் ஒருவரை  கைகளாலும், தலைக்கவசத்தைக் கொண்டும் கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில்  நேற்று முன்தினம் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22,23 மற்றும் 24 வயதுடைய கிரிந்திவெல, தெல்கொட, புத்தல, குளியாபிட்டிய மற்றும் கலன்குட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தினுள் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.