குழியில் விழுந்த காட்டு யானையை காப்பாற்றியதால் யுவதிக்கு நேர்ந்த கதி!

63 0
அநுராதபுரம், அளுத்வெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அநுராதபுரம், அளுத்வெவ அமைந்துள்ள வீடொன்றிற்கு பின்புறத்தில் உள்ள குழியில் காட்டு யானை ஒன்று விழுந்துள்ளது.

பின்னர் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து குழியில் விழுந்த காட்டு யானையை காப்பாற்றியுள்ளனர்.

இதன்போது , திடீரென குழப்பமடைந்த யானை வீதியில் பயணித்த யுவதி ஒருவரை பலமாக தாக்கியுள்ளது.

காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.