எங்கள் நாட்டு அரசியலில் தலையிடாதீர்கள்: அமெரிக்காவுக்கு ஜேர்மனியின் புதிய தலைவர் எச்சரிக்கை

190 0

ஜேர்மன் அரசியலில் தலையிடவேண்டாம் என அமெரிக்காவை எச்சரித்துள்ளார் ஜேர்மனியின் புதிய சேன்ஸலரான ப்ரெட்ரிக் மெர்ஸ்.

ஜேர்மன் அரசியலில் தலையிடும் அமெரிக்கா

ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சியான BfV, வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, ஜேர்மன் உளவுத்துறையின் அறிக்கையை, அமெரிக்க மாகாணச் செயலரான மார்க்கோ ரூபியோ (Marco Rubio) கடுமையாக விமர்சித்துள்ளார்.

எங்கள் நாட்டு அரசியலில் தலையிடாதீர்கள்: அமெரிக்காவுக்கு ஜேர்மனியின் புதிய தலைவர் எச்சரிக்கை | Friedrich Merz Warns Us Dont Interfere In Germany

சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஜேர்மனி, எதிர்க்கட்சிகளை கண்காணிக்க தனது உளவுத்துறைக்கு அதிகாரம் அளித்துள்ளது.

இது ஜனநாயகம் அல்ல, இது மாறுவேடத்திலிருக்கும் கொடுங்கோலாட்சி என விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு மெர்ஸ் எச்சரிக்கை

இந்நிலையில், ஜேர்மனியின் புதிய சேன்ஸலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப்ரெட்ரிக் மெர்ஸ், ஜேர்மன் அரசியலில் தலையிடவேண்டாம் என அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

 

 

 

 

 

friedrich merz

அமெரிக்காவின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்த மெர்ஸ், தான் தொலைபேசி வாயிலாக ட்ரம்பிடம் பேச இருப்பதாகவும், அமெரிக்காவை ஜேர்மன் அரசியலில் தலையிடாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தான் தலையிடவில்லை என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.