200 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை ; 94 இடங்களில் பெரும்பான்மையை பெற்றது

92 0
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதுவரை வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி, 239 உள்ளூராட்சி  சபைகளில் 200 சபைகளில்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

அதன்படி, தேசிய மக்கள் சக்தி 94 உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது, அங்கு அவர்கள் தங்கள் ஆட்சியை அமைக்க முடியும்.

எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளில்  பெரும்பான்மையைப் பெற அவர்கள் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது. அதன்படி, 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றது.