வவுனியாவில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் 74 முறைப்பாடுகள்

110 0

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் இதுவரை 74 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வவுனியாவில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் திங்கட்கிழமை (05) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன. இதுவரை எந்தவித குழப்பங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதுவரைக்கும் 74 முறைப்பாடுகள்  கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனத் தெரிவித்தார்.