மேர்வின் மீளவும் விளக்கமறியலில்

72 0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூன்று பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொடை பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், தற்போது நீதிமன்றத்தை புறக்கணித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.