2025ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் 102,387பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
108வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.





