15 மணி நேர செய்தியாளர் சந்திப்பு – மாலைதீவு ஜனாதிபதி சாதனை

106 0

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு நேற்று (3) செய்தியாளர்  மாநாட்டில் 15 மணி நேரம் உரையாற்றியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நீண்ட நேர உரையானது உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் சாதனையை முறியடித்ததாகக் கூறப்படுகிறது.

சமூகத்தில் பத்திரிகைகளின் முக்கிய பங்கையும் , உண்மை, சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதேவேளை பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் மூலம் சமர்ப்பித்த கேள்விகளுக்கும் முய்சு பதிலளித்தார்.

இந்த செய்தியாளர் மாநாடானது நள்ளிரவு தாண்டியும் நீடித்துள்ளமை ஒரு ஜனாதிபதியின் புதிய உலக சாதனை என்று கூறப்படுகின்றது.