பாகிஸ்தான் கொடியை ஏந்திய கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இதேவேளை, இந்தியக் கொடியை ஏந்திய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நிறுத்தி வைப்பதற்கும் இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

