மீட்டியாகொடவில் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் பலி!

70 0

மீட்டியாகொட, தம்பஹிட்டியவில் சனிக்கிழமை இரவு (03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அந்தப் பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டியே ஒருவர் பலியானதுடன்  மற்றுமொருவர் காயமடைந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 46 வயதுடையவர் உயிரிழந்துள்ளதுடன் 52 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில்,  பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீட்டியாகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.