அத்துடன் சீனாவின் மற்றொரு அரசு நிறுவனமான மெட்டலர்ஜிகல் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா மீதான அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்ட தாமதங்கள், செலவீணங்கள் மற்றும் ஒப்பந்தம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடிப்படையாக கொண்டே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் நிறைவடைந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொட்டாவா-தொடங்கொட பகுதிக்கான பணிகளுக்கான 7.91 பில்லியன் ரூபா கொடுப்பணவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறும் அரசாங்கம் அவற்றை விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகள் முடிவடையும் வரை எவ்வித கட்டணங்களையும் சீன நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
குறிப்பாக கடந்த ஆட்சியில் இடம்பெற்ற இந்த கொடுக்கல் வாங்கல் குறித்து அரசாங்கம் கடும் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளது. சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் கட்டுமான பணிகளை முன்னெடுத்தாலும் திட்டத்திற்கான நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது.
நடைமுறை தோல்விகள் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், குறிப்பாக 2011 ஆம் ஆண்டில் ஒப்பந்தப்படி முன்னெடுக்கப்படாத விடயங்கள் குறித்து இணக்கப்பாட்டு சபை நடவடிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
எனினும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை வெளியிடுகிறது. மறுபுறம் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தடனான நீண்ட கால நேரடி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இறுதி முடிவுகள் எடுக்கப்பட வில்லை.
2024 ஆம் ஆண்டில் தேர்தலுக்கு முந்தைய அமைச்சரவை ஒப்புதல், அதைத் தொடர்ந்து அவசரமாக கையொப்பமிடப்பட்ட தீர்வு ஒப்பந்தம் ஆகியவை குறித்து கூடுதல் கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம், சில ஒப்பந்தங்களை மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது கடந்த கால முறைகேடுகளை சரி செய்யும் வகையில் அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீன அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகள் குறித்த பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. முக்கியமான மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டமும் மெட்டலர்ஜிகல் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளது.
2015 ஆம் ஆண்டில் போட்டியற்ற, கோரப்படாத முன்மொழிவின் மூலம், மிகைப்படுத்தப்பட்ட விலையில் மெட்டலர்ஜிகல் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா நிறுவனத்திற்கு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பிரிவு சுமார் பத்து வருடங்களை நெருங்கியுள்ள நிலையில் 40 வீதத்திற்கும் குறைவான பணிகளே நிறைவடைந்துள்ளன.
இலங்கையின் 2022 பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இந்த பணிகள் நிறுத்தப்பட்டன. 2019 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட 989 மில்லியன் அமெரிக்க டொலர் சீன எக்ஸிம் வங்கி கடன் வசதி, குறைந்தபட்ச தொகைக்கு (தோராயமாக 51 மில்லியன் அமெரிக்க டொலர்) வீழ்ச்சியடைய திட்டம் நெருக்கடிகளை எதிர்கொண்டது. பணப் பற்றாக்குறை உள்ள இலங்கை அரசாங்கத்தால் பில்லியன் கணக்கான ரூபாய் செலவில் அவசர பாதுகாப்புப் பணிகன் தேவைப்படுகிறது.
மேலும், மெட்டலர்ஜிகல் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா நிறுவனம் காலாவதியான வங்கி உத்தரவாதங்களை (முன்கூட்டியே செலுத்தும் உத்தரவாதம் மற்றும் செயல்திறன் பத்திரம்) புதுப்பிக்கத் தவறியதாகக் கூறப்பட்டபோது கடுமையான கேள்விகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து நிதி அமைச்சு தலையிட்டமையினால் கடுமையான குழப்பங்கள் மற்றும் இருதரப்பு உறவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டன.
எனினும் சீன எக்ஸிம் வங்கியை சமாளிக்கும் வகையில், கோரிக்கை கடிதங்கள் திரும்பப் பெறக் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து மற்றொரு வங்கி மூலம் உத்தரவாதங்கள் இறுதியில் நீட்டிக்கப்பட்டன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பிரிவு 3இல் (பொத்துஹெர-கலகெதர) விலைமனுகோரல் முறைகேடுகள் தொடர்பாக மெட்டலர்ஜிகல் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா நிறுவனம் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனடிப்படையில் அங்கு அதன் குறைந்த ஏலம் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் நிறுத்தப்பட்ட மெட்டலர்ஜிகல் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா திட்டம் ஆகியவற்றின்; வெளிப்படைத்தன்மை, செலவுகள், திட்ட செயல்படுத்தல் மற்றும் அரச-இணைக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒப்பந்தங்களில் இலங்கையின் பாதிப்பு குறித்து பரந்த விமர்சனங்களைத் எழுந்துள்ளன.
பல பில்லியன் ரூபாய் ஒப்பந்தங்களை வழங்கும்போது போதுமான மேற்பார்வை மேற்கொள்ளப்பட்டதா? என்பது முக்கிய கேள்வியாகும்.
இலங்கை பொருளாதார சரிவிலிருந்து மீள தீவிரமாக முயற்சிப்பதால், சர்வதேச நல்லெண்ணத்தை பெரிதும் நம்பியிருப்பதாலும், சீனாவிற்கு நேரடியாகக் கொடுக்க வேண்டிய குறிப்பிடத்தக்க தொகைகள் உட்பட கடன் மறுசீரமைப்பை வழிநடத்துவதாலும் இந்த சிக்கல் ஏற்படுகிறது.
சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவன நெருக்கடி நேரடி சீனக் கடன் அல்ல என்றாலும், மெட்டலர்ஜிகல் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா நிறுவனத்தின் தோல்வியுடன் ஒரு சர்ச்சைக்குரிய மோதல் இருதரப்பு இராஜதந்திர உறவுகளை சீர்குலைக்கிறது.
இது பெய்ஜிங்குடனான பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கும். எனெனில் ‘கடன்-பொறி இராஜதந்திரம்’ என்ற குற்றச்சாட்டுகளால் ஏற்கனவே விமர்சனங்கள் உள்ளன.

