“லொகு பெடி” கடந்த 2024 ஆம் ஆண்டு பெலருஸ் நாட்டில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சிலர் பெலருஸ் நாட்டுக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில், “லொகு பெடி” நாளை ஞாயிற்றுக்கிழமை (04) இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

