தேசபந்து தென்னக்கோனுக்கு கொலை மிரட்டல் ; சிஐடியினரால் விசாரணைகள் ஆரம்பம்!

90 0

இனந்தெரியாத இரண்டு நபர்களால் தேசபந்து தென்னக்கோனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பூஸா சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடமிருந்து அனுமதி பெற்றுள்ளனர்.

தேசபந்து தென்னக்கோனுக்கு பாதாள உலக கும்பலின் தலைவர் கஞ்சிபான இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரானிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவர் தேசபந்து தென்னக்கோனுக்கு அறிவித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.