அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் – காரணம் வௌியானது

99 0

தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தவர்கள், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பென்ன பகுதிக்கு அருகில் வீதியில் வாகனங்களை நிறுத்தி மதிய உணவு உட்கொண்டு ஓய்வெடுக்கும் காட்சிகளைக் காட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தெற்கு அதிவேக வீதியின் தெற்கிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிவேக வீதி பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

போக்குவரத்து சட்டத்தின் கீழ், அதிவேக வீதியில் எந்தவொரு இடத்திலும் அல்லது வீதியின் எந்தவொரு பகுதியிலும் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அவசர ஒழுங்கையில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி உள்ளது என்பது அத்தியாவசிய அவசர சந்தர்ப்பங்களில் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பேருந்துகள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டமைக்கான காரணம், வெலிப்பென்ன சேவைப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் போதுமான இடவசதி இல்லாததே என தெரிவிக்கப்படுகிறது.