கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பத்தில் உயிரிழந்தவர் இரத்மலானை – மஹிந்தாராம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிந்த கயாஷான் எனப்படும் டிகிரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, குடு அஞ்சு என்ற நபரின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்துபவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

