வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க முயன்ற நால்வர் கைது

86 0

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க முயன்ற நான்கு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வில்பத்து தேசிய பூங்காவின் குகுல்கடுவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா ஈச்சங்குளம் , மொனராகலை ரணவராவ மற்றும் அநுராதபுரம் ஓயாமடுவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 52,  57,  20 மற்றும் 34 வயதுடையவர்கள் ஆவர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.