ஜனாதிபதியின் அடுத்த வௌிநாட்டு பயணம்

108 0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மே மாதம் 3 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை வியட்நாமிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணம் சர்வதேச வெசாக் தினத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், இதன்போது பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையெழுத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கைகள் நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பட்ட உடன்படிக்கைகள் கீழே… 

இலங்கையின் பண்டாரநாயக்க இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் வியட்நாமின் இராஜதந்திர சர்வதேச விஞ்ஞான நிறு வகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 

சிக்கலான சமகால உலகில் ஒருவருக்கொருவர் நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ள இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான புதிய கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன், பொதுவாக ஆர்வங்காட்டுகின்ற துறைகளில் பரஸ்பரமாக நன்மையளிக்கின்ற ஒத்துழைப்புக்களைப் பேணிச் செல்வதற்காக நிறுவன ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் இயங்குகின்ற பண்டாரநாயக்க இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் வியட்நாமின் இராஜதந்திர சர்வதேச விஞ்ஞான நிறுவகத்திற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அத ன்மூலம், விசேட நிபுணத்துவ அறிவுப் பரிமாற்றம், இராஜதந்திரிகள், கல்வியியலாளர்கள், அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பரிமாற்றம் செய்து கொள்வதுடன், கற்கைகள் மற்றும் ஆய்வு நிகழ்ச்சித்திட்டங்கள், பல்வேறு பாடநெறிகள், மாநாடுகள் இராஜதந்திர துறைசார் ஏனைய கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுக்குரிய விசேட நிபுணத்துவங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கா ன வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு ம் எதிர்பார்க்கப்படுகின்றது.