மூன்றாவது தடவையாக கூடிய விசாரணைக் குழு

80 0

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க பொலிஸ் விசாரணைக் குழுவொன்றைப் பரிந்துரைக்குமாறு, விசாரணைக் குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த விசாரணைக் குழு நேற்றையதினம் (28) பாராளுமன்றத்தில் மூன்றாவது தடவையாகவும் கூடியபோது நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசாரணைக் குழுவின் ஒத்துழைப்புடன் எதிர்கால விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், நாளை (30) மீண்டும் கூடுவதற்கு இந்த விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது