பாணந்துறையில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி, மற்றுமொருவர் காயம்

65 0

பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையிலுள்ள ஹிரணை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (28) இரவு குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாணந்துறை, ஹிரணை மேற்கு மாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற  விருந்துபசாரத்தின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் 35 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் 20 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.