கொழும்பு, காக்கைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமல் போன இளைஞன் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, மட்டக்குளி காக்கைத்தீவு கடலில் நீராடச்சென்ற மூவரில் ஒருவரே காணாமல் போயிருந்தார்.
குறித்த காணாமல் போன இளைஞன் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞராவர்.
மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

