பதுளை, எட்டம்பிட்டி , கிங்ரோஸ் தோட்டப் பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது.
கிங்ரோஸ் தோட்டப் பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணும் காயமடைந்தவர்களும் கடும் மழை காரணமாக தோட்டப் பகுதியில் இருந்த போதே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

