சுயேட்சைக் குழு இலக்கம் – 4 இல் வெள்ளவத்தை பாமன்கடை மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான எம். வாசுதேவன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் எங்களுடைய சுயேட்சைக் குழு இலக்கம் 4 இன் தலைவரான கே.ரி.குருசுவாமி மற்றும் இணைத்தலைவரான பழ புஷ்பநாதன் ஆகியோரின் வழிகாட்டுதல்களில் இம்முறை கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.
பல பாரம்பரிய கட்சிகளின் வழிகளில் வந்து கட்சிகளிலிருந்து மாறி மாறி பதவிகளுக்காக போட்டியிடும் வேறு சிலரைப் போன்று நாங்கள் செயற்படப்போவதில்லை. நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அடிப்படைக் காரணம் மக்களுக்கான தேவைகள் பல காணப்படுகின்றன அவற்றை அறிந்து இலகுவாக தீர்வுகளை வழங்கவே போட்டியிடுகின்றோம்.
பல பாரம்பரிய கட்சிகள் போட்டியிட்டாலும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் அவர்கள் எங்களது இருப்பிடத்தை நோக்கி வருவதை தவிர்த்துக் கொள்கிறார்கள். இது மக்கள் எம்மிடம் தெரிவித்த பாரிய குறையான கருத்தாகும். நாம் அவ்வாறு செயற்படப்போவதில்லை. நாம் மக்களோடு மக்களாகவே இருந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போகின்றோம்.
ஆகவே மக்களின் அடிப்படை காரணங்கள், தேவைகள் என்னவென்று நாங்கள் அறிந்து கொண்டு அந்த தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பொதுவாக என்னுடைய பாமன் கடைத் தொகுதியில் நான் கடந்த 18 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றேன். அங்குள்ள பிரச்சினைகள் என்னவென்று நான் அறிவேன்.
நுளம்பு பிரச்சினை, வடிகால் அமைப்புப் பிரச்சினை, மழை காலங்களில் வீதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கும் பிரச்சினை, கழிவகற்றும் பிரச்சினைகள் போன்றன காணப்படுகின்றன.
இன்னும் பல குறைபாடுகளுடன் நான் போட்டியிடும் பகுதியில் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள். இது குறித்து அந்த மக்கள் என்னிடம் பல முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகரசபைக்கு நமது சுயேட்சைக் குழு சார்பில் நாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம்.
எனவே, மக்களாகிய நீங்கள் எங்களுக்கு வாக்களித்து கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யும் பட்சத்தில் நாங்கள் உங்கள் தேவைகள், உங்களுடைய பிரச்சினைகளை குழுவாக வந்து அணுகி அதற்கு தீர்வுகாண முயற்சிப்போம்.
ஆகவே உங்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்க்க வேண்டுமென்றால், நீங்கள் சரியான முடிவெடுத்து, எமது லாந்தர் சின்னத்தின் கீழ் போட்டியிடும் சுயேட்சைக்குழு இலக்கம் – 4 இற்கு வாக்களித்து எம்மை வெற்றி பெறச் செய்து நீங்கள் பயன் பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என்றார்.

