முல்லைத்தீவிலிருந்து சென்ற மரக்கடத்தல் லொறி மடக்கிப்பிடிப்பு

67 0

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியில் மரம் கடத்தி சென்ற லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறி ஒன்றில் மரம் கடத்தல் இடம்பெறுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றையதினம்(27.04.2025) சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பெறுமதி மிக்க 12 முதிரை மரக்குற்றிகளுடன் லொறியை செலுத்திய சிறிய ரக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் இன்றையதினம்(28) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.