பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

83 0

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவினால் நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ரிட் மனு இன்றைய தினம் காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.