அநுராதபுரம், அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த தந்தை, மகன் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நால்வரும் சிகிச்சைக்காக அநுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

